மொரகஹாகந்த நீர்த்தேக்கத்திற்கு அருகில் சட்டவிரோதமாக கழிவுகளை கொட்டிய இருவர் கைது

மொரகஹாகந்த நீர்த்தேக்கத்தின் சரிவுகளில் அமைந்துள்ள மின்னேரியா-கிரித்தலே வனவிலங்கு சரணாலயத்தில் சட்டவிரவிரோதமாக மாநகர கழிவுகளை கொட்டிய குற்றச்சாட்டில் இருவர் நவம்பர் 24ஆம் திகதி இரவு இரண்டு லொறிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கழிவுகளை தம்புள்ளையில் உள்ள திகம்பதஹ மறுசுழற்சி வசதிக்கு கொண்டு செல்வதற்கு பதிலாக, நௌலவுக்கு அருகில் லொறிகள் திசைதிருப்பப்பட்டதாக கூறப்படுகிறது. ஹிரு நியூஸ் மற்றும் டெய்லி மிரர் செய்திகளின்படி, கழிவுகள் கம்பளை மாநகர சபைக்கு சொந்தமானவை என்றும், தமிழ் மிரர் கண்டிக்கு சொந்தமானது என்றும் தெரிவித்துள்ளன.
எலஹெரவில் உள்ள அதிகாரிகள், கம்பளை பிரதேசவாசிகள் என அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்களை மொரகஹாகந்த காட்சி முனைக்கு அருகில் கைது செய்தனர். இருவரும் நவம்பர் 25ஆம் திகதி பிற்பகல் நௌல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.