அனுராதபுரம் மாவட்டத்தில் 3,500 இற்கும் மேற்பட்ட குளங்களை புனரமைக்க அரசாங்கம் திட்டம்

உள்ளூர் நீர்ப்பாசன உள்கட்டமைப்பு மற்றும் கிராமியப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அனுராதபுரம் மாவட்டத்தில் 3,500 இற்கும் மேற்பட்ட குளங்களை முன்னுரிமை அடிப்படையில் புனரமைப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற ஆரம்பக்கட்டப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, மாவட்டச் செயலகத்தில் அண்மையில் இந்த முன்முயற்சி தொடர்பான கலந்துரையாடலுக்குத் தலைமை தாங்கினார்.
சேகரிக்கப்பட்ட வண்டல் மண்ணை அகற்றுதல், நீர் கொள்ளளவை விரிவுபடுத்துதல் மற்றும் சேதமடைந்த குளங்களைச் சீரமைத்தல் ஆகியவை முன்னுரிமைப் பணிகளில் அடங்கும். எதிர்வரும் வரவுசெலவுத் திட்டம் மூலம் இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடுகளைப் பெறுவதற்கு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
கைவிடப்பட்ட குளங்களை மீட்டெடுக்கவும், நன்னீர் மீன்பிடி, சுற்றுலா மற்றும் ஏற்றுமதிக்கான அல்லிச் சாகுபடி உள்ளிட்ட வாழ்வாதார நடவடிக்கைகளில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் கிராமப்புற சமூகங்களை ஈடுபடுத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.