வரவுசெலவுத் திட்டம் தொடர்பில் சிக்கனமான, சமத்துவமான வரி விதிப்புக் கொள்கைகளை அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தல்

ஜனாதிபதியும் நிதியமைச்சருமான அநுர குமார திஸாநாயக்கவின் கீழ் தேசிய வரவுசெலவுத் திட்ட எதிர்பார்ப்புகளின் பின்னணியில், பொது வளங்களை தேசிய சுபீட்சம், பொருளாதார வாய்ப்பு மற்றும் சமூக நலன் ஆகியவற்றாக மாற்றுவதிலேயே நிதி வெற்றி தங்கியுள்ளது என ஓர் ஆய்வு குறிப்பிட்டது.
வரி விதிப்பு என்பது ஒரு நிர்வாகக் கருவியே அன்றி, வரி அறவிடுவதற்கான உரிமை அல்ல என அந்த ஆய்வுக் கட்டுரை விவரித்தது. தற்போதுள்ள அதிக வரி விகிதங்கள் ஏற்கனவே குடும்பங்கள் மற்றும் வணிகங்களுக்கு சுமையாக இருப்பதால், வருவாய் நடவடிக்கைகள் பொருளாதார ரீதியாக விவேகமானதாகவும் சமூக ரீதியாக சமத்துவமானதாகவும் இருக்க வேண்டும் என அது குறிப்பிட்டது.
பண்டைய மூலோபாய நிபுணர் கௌடில்யரின் கருத்துக்களை மேற்கோள் காட்டி, உற்பத்தித் தளங்களை பலவீனப்படுத்தாமல் வரிகளை சிக்கனமாக சேகரிக்க வேண்டும் என அந்த ஆய்வு வலியுறுத்தியது. அதிகப்படியான அல்லது மோசமாக வடிவமைக்கப்பட்ட வரி விதிப்பு முதலீட்டை ஊக்கப்படுத்துவதோடு நுகர்வையும் குறைக்கும் என அது எச்சரித்தது.