நூற்றாண்டு பழைமையான கலால் கட்டளைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய கலால் சட்டத்தை ஜனாதிபதி திஸாநாயக்க முன்மொழிந்தார்

நூற்றாண்டு பழைமையான கலால் கட்டளைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய கலால் சட்டத்தை 2025 வரவு செலவுத் திட்டம் முன்மொழிவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். வருவாய் முகாமைத்துவத்தை மேம்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
புதிய சட்டம் இயற்றப்படும் வரை, தற்போதுள்ள கலால் கட்டளைச் சட்டத்தின் சிக்கலான செயல்முறைகளை எளிதாக்குவதற்கு அரசாங்கம் திருத்தங்களை முன்மொழிகிறது.