19 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய பலத்த மழை மற்றும் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நவம்பர் 28ஆம் திகதி மாலை அல்லது இரவு வேளைகளில் 19 மாவட்டங்களின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும். கடல் பகுதிகளில் இடியுடன் கூடிய மழையின் போது மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் தற்காலிக பலத்த காற்று வீசுவதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.