2027 வரவுசெலவுத் திட்டத்தில் PAYE வரி அறவீட்டுக்கான உச்சவரம்பை அதிகரிக்க ஜனாதிபதி திஸாநாயக்க சமிக்ஞை
வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ள 2027 வரவுசெலவுத் திட்டத்தில், சம்பளத்தின் மீதான வருமான வரி (PAYE) அறவீட்டுக்கான உச்சவரம்பை அரசாங்கம் மேலும் அதிகரிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
சனிக்கிழமை கொழும்பில் உரையாற்றிய திஸாநாயக்க, உச்சவரம்பு ஏற்கனவே ரூ. 100,000 இலிருந்து ரூ. 150,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், அதிக அடிப்படைச் சம்பளம் மட்டும் அர்த்தமுள்ள நிதி நிவாரணத்தை வழங்கப் போதுமானதல்ல என்றும் குறிப்பிட்டார்.
வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னதாக, அவர் பெறுமதி சேர் வரி (VAT) விகிதங்களை இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் படிப்படியாகக் குறைப்பது, கல்விப் பொருட்களுக்கான வரிகளை நீக்குவது மற்றும் IMF ஆல் முன்மொழியப்பட்ட குடியிருப்பு சொத்து வரியை ஒரு வருடத்திற்கு ஒத்திவைப்பது குறித்தும் கோடிட்டுக் காட்டினார்.
கூடுதலாக, சில வரிகளை நீக்குவதற்கும், அடிமட்ட மூலதனச் செலவினங்களுக்காக ரூ. 2 பில்லியன் ஒதுக்குவதற்கும், பொது சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளதாக திஸாநாயக்க குறிப்பிட்டார்.